கள்ளக் காதலனை போட்டுத் தள்ளிய முன்பள்ளி ஆசிரியை பொலிஸாரால் அதிரடியாகக் கைது..!

தனமல்விலவில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் முன்பள்ளி ஆசிரியை ஒருவரை பொலிசார் கைது செய்தனர்.
சமாதிகம பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்ட ஒருவரின் சடலத்தை தனமல்வில பொலிசார் மீட்டுள்ளனர்.பலியானவர் தலையில் துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாக, முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவருடைய கள்ளக்காதலியான ஆசிரியையே இதன் சூத்திரதாரியென்பது தெரிய வந்தது.

அவர் கைது செய்யப்பட்டபோது, உயிரிழந்தவரின் கைத்தொலைபேசி சிதைந்த நிலையில் மீட்கப்பட்டது.
இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய ஏனைய சந்தேக நபர்களைக் கண்டுபிடிக்க தனமல்வில பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.சந்தேக நபர் வெல்லவாய நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, இன்றுவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்