இம்மாத இறுதியில் இலங்கை -ஸிம்பாப்வே டெஸ்ட் தொடர் ஆரம்பம்..!!

சர்வதேச கிரிக்கட் பேரவையின் உறுப்புரிமை மீண்டும் சிம்பாம்வே அணிக்கு வழங்கப்பட்டதை தொடர்ந்து, இம்மாத இறுதியில் இலங்கைக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகளில் சிம்பாம்வே அணி விளையாடவுள்ளது.

2018ஆம் ஆண்டு ஐசிசி உறுப்புரிமையை இழப்பதற்கு முன்பு இறுதியாக பங்களாதேஷ் அணிக்கு எதிராக சிம்பாம்வே அணி டெஸ்ட் போட்டியொன்றில் விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கடந்தாண்டு ஒக்டோபர் மாதம் மீண்டும் ஐசிசியின் உறுப்புரிமையை பெற்றுக்கொண்டதன் பின்னர் சிம்பாம்வே அணி விளையாடவுள்ள முதலாவது டெஸ்ட் தொடராக இது அமையவுள்ளது.
அதன்படி, எதிர்வரும் 19ஆம் திகதி முதலாவது டெஸ்ட் போட்டி ஹராரேயில் நடைபெறவுள்ளது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்