தனது அதீத திறமையினால் இலங்கை தேசிய அணியில் இடம்பிடித்த யாழ்ப்பாணத்தின் மைந்தன்!! குவியும் வாழ்த்துக்கள்…..

தனது அதீத திறமையினாலும் விடாமுயற்சியினாலும் இலங்கை தேசிய உதைப்பந்தாட்ட அணியில் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளார் யாழ்ப்பாணத்தின் மைந்தன் ஒருவர்.ஆம், யாழ் மண்ணின் மைந்தனான இவர், யாழ் ஊரெழு பிரதேசத்தை சொந்த இடமாக கொண்டவர்..ஊரெழு றோயல் அணியை பிரிதிநிதித்துவப்படுத்தி இவரது தந்தையார் தர்மகுலநாதன் ( வெள்ளை) என எல்லோராலும் அன்பாக அழைக்கப்படும் யாழ் மண்ணின் மிகச் சிறந்த வீரனுக்கு மகனாக பிறந்த தர்மகுலநாதன் கஜகோபன் எனும் சிறப்பான வீரனே இவர்.

மிகக் குறுகிய காலத்தில் பல்வேறு காத்திருப்புக்கள்..போட்டிகள்…போட்டிக் களத்தில் ஏற்பட்ட உபாதைகள்.. சத்திரசிகிச்சைகள்…வேலைப்பளுக்கள் என பல்வேறு தடைகளையும் தாண்டி, தற்போது இலங்கை தேசிய உதைப்பந்தாட்ட அணியில் விளையாட தகுதி பெற்று, தாம் பிறந்து வளர்ந்த ஊரெழு மண்ணிற்கு பெருமை சேர்த்துள்ளார் இந்த வீரர்.!

உதைப்பந்தாட்டம் மீது இவரது குடும்பமே கொண்டுள்ள காதல், யாழ் மண் அறிந்த விடயமே..யாழ் குடாநாட்டில் ஒவ்வொரு உதைப்பந்தாட்டப் போட்டிகளிலும் ஊரெழு மண்ணின் பெருமை சாற்றும் றோயல் அணியின் திறமை, வடபகுதியில் உள்ள உதைப்பந்தாட்ட ரசிகர்கள் நேரில் பார்த்து அறிந்த விடயமாகும்…

அந்த வகையில், தினமும் கடுமையான பயிற்சிகள் வேலைப்பளுக்கள் வேதனைகள்.. என தடைதாண்டும் இவரது சாதனைப் பயணம் இன்று இந்த வீரனை இலங்கை தேசிய உதைப்பந்தாட்ட அணியில் இடம் பிடிக்க வைத்துள்ளது.

மிக விரைவில் தெற்காசிய நாடுகளில் ஒன்றான பங்களாதேஷில் நடைபெறப் போகும் தெற்காசிய தங்கக் காற்பந்து போட்டிகளில் இலங்கை அணியை பிரதிநிதித்துப்படுத்தி விளையாடவிருக்கிறார் என்ற நல்ல செய்தியையும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.முன்னதாக வடபகுதியில் இருந்து தெரிவாகி தேசிய உதைப்பந்தாட்ட அணியை பிரநிதித்துவப்படுத்தும், வடபகுதியைச் சேர்ந்த தமிழ் வீரர்களான யூட்சுபன்,நிதர்சன்,ஞானரூபன், எடிசன் ஆகியோருடன் இணைந்து இலங்கை அணியின் சார்பில் விளையாடி ஒட்டுமொத்த தமிழினத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டுமென எமது இணையத்தளத்தின் சார்பில் வாழ்த்தி நிற்கின்றோம்..தடைகளை உடைத்து, அச்சம் தாண்டி, உச்சம் தொட்ட சாதனை நாயகனுக்கு எமது அன்பான வாழ்த்துக்கள்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்