சர்வதேச ரி-20 தொடரில் பங்கேற்க இந்தியாவிற்கு பயணமான இலங்கை கிரிக்கெட் அணி..!!

இந்திய அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட சர்வதேச இருபதுக்கு – 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இலங்கை அணியினர் இன்று காலை இந்தியா நோக்கிப் புறப்பட்டுள்ளனர்.அதன்படி இலங்கை அணிக் குழாமினர் இன்று காலை 7.20 மணியளவில் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து இந்தியாவின் சென்னை விமான நிலையத்தை நோக்கிப் புறப்பட்டனர்.இந்­தி­யா­வுக்கு எதி­ரான மூன்று போட்­டிகள் கொண்ட இரு­ப­துக்கு – 20 தொடரின் முதல் போட்டி எதிர்­வரும் 5 ஆம் திகதி நடை­பெ­ற­வுள்ளது.இதற்­காக 16 பேர் கொண்ட இலங்கை அணி அறி­விக்­கப்­பட்­டது. பல்­வேறு காயங்கள், போதிய உடற்­த­கு­தி­யின்மை கார­ண­மாக விலகி­யி­ருந்த சக­ல­துறை ஆட்­டக்­கா­ரரும் முன்னாள் தலை­வ­ரு­மான அஞ்­சலோ மெத்தியூஸ் 18 மாதங்­க­ளுக்குப் பிறகு இரு­ப­துக்கு-20 அணிக்கு உள்­வாங்­கப்­பட்­டுள்ளார். இவ­ரது வருகை இலங்கை அணிக்கு பின் வரி­சையில் கூடுதல் பலம் சேர்க்கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. எனினும், குசல் ஜனித் பெரேரா, தனுஷ்க குண­தி­லக்க, அவிஷ்க பெர்­னாண்டோ, பானுகா, ஒசத, ஷனக்க ஆகியோர் அணியில் உள்ளதால் முதல் இரண்டு போட்­டி­களில் மெத்­தியூஸ் இடம்­பெறுவாரா என்­பது நிச்­ச­ய­மில்லை.

இலங்கை அணி:மலிங்க (தலைவர்), குசல் ஜனித் பெரேரா, தனுஷ்க குண­தி­லக, அவிஷ்க பெர்­னாண்டோ, பானுக்க ராஜ­பக் ஷ, ஒசத பெர்­னாண்டோ, தசுன் ஷனக, அஞ்சலோ மெத்தியூஸ், டிக்வெல்ல, குசல் மெண்டிஸ், ஹசரங்கா, சந்தகன், தனஞ்சய டி சில்வா, லகிஹி குமார, இசுரு உதானா.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்