ஜனாதிபதி கோட்டாயவின் அதிரடிச் செயற்பாடுகள்…அழகோவியங்களாக மாறும் சுற்றுப்புறச்சூழல்..!

கடந்த சில வாரங்களாக நாடளாவிய ரீதியில் இளைஞர்கள் பலர் ஒன்றிணைந்து நகரங்களிலும் அதனைச் சூழ உள்ள பிரதேசங்களிலும் இருக்கும் சுவர்களை வண்ணமயமாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.கடந்த ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ச வெற்றியீட்டி ஜனாதிபதி ஆனதன் பின்னர் நாட்டின் சுற்றுப் புறச் சூழல் தொடர்பில் அதிக கவனம் செலுத்தி வருகின்றார்.அவரின் செயற்பாடுகளைப் பின்பற்றும் வகையில், தற்போது வீதியோரச் சுவர்களில் சுற்றுச் சூழலை அழகு படுத்தும் நோக்கில் பல்வேறு ஓவியங்கள் இளைஞர்களால் வரையப்பட்டு வருகின்றன.நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் இந்த நடவடிக்கையில், திருகோணமலையில் இளைஞர்களுடன் இணைந்து வெளிநாட்டவர்கள் சிலரும் சுவரோவியம் வரையும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.அநேகமான இடங்களில் இளைஞர், யுவதிகள் சுயமாக முன்வந்து இவ்வாறான சுவரோவியங்களை வரைகின்ற நிலையில், அவர்களுடன் இணைந்து வெளிநாட்டவர்களும் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவது பலருக்கும் முன்மாதிரியாக திகழ்கின்றது.இவ்வாறு வரையப்படும் ஓவியங்கள் தொடர்பில் பல மாற்றுக் கருத்துக்கள் இருந்தாலும், விமர்சனங்கள் மற்றும் அரசியல் போன்றவற்றையும் தாண்டி இளைஞர்களின் முயற்சி பாராட்டத்தக்கது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்