உயர்தரத்தில் சித்தியடைந்தும் பல்கலைக்கழக அனுமதி கிடைக்காத மாணவர்களுக்கு கிடைக்கப் போகும் அதிஷ்டம்…!!

பல்கலைக்கழக வாய்ப்புக்கள் கிடைக்காமல் இருக்கும் மாணவர்களுக்கும் சிறப்பு ஏற்பாடுகளை செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.இது தொடர்பில் அமைச்சர் சமல் ராஜபக்ஷ தகவல் வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள தகவல்களில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

உயர்தரத்தில் சித்தியடைந்திருந்த போதிலும் பல்கலைக்கழக வாய்ப்பை பெறாத மாணவர்களுக்கு தொழில்நுட்பவியல் சார்ந்த பட்டம் ஒன்றை வழங்குவது தொடர்பில் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய இந்த செயற்பாட்டை எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்