திருவள்ளுவர் வேடத்தில் திருக்குறள்..!! தமிழகத்தில் அசத்தும் ஓய்வு நிலை அரச அதிகாரி..!

தமிழகத்தில், ஓய்வுபெற்ற அரசு ஊழியர் ஒருவர் திருவள்ளுவர் வேடத்தில் அரசு மற்றும் தனியார் பாடசாலைகளுக்கு சென்று மாணவர்களுக்கு திருக்குறள் சொல்லிக் கொடுக்கிறார்.தமிழகத்தின் திருவள்ளூர் மாவட்டம் புட்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ‘திருக்குறள்’ சுப்புராயன். இவர், சென்னை தலைமைச் செயலகத்தில் சட்டப்பிரிவு அலுவலக ஊழியராக 31 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.திருக்குறள் மீது அதிக ஆர்வம் கொண்ட சுப்புராயன், திண்டிவனத்தில் திருவள்ளுவர் இறையானார் கோயில் அமைத்து, அங்கு வரும் மாணவ- மாணவிகளுக்கு திருக்குறளை கற்பித்து வருகிறார்.

அதேபோல், புட்லூர் பகுதியில் திருக்குறள் பயிற்சி மையம் அமைத்து உள்ளார். மேலும் அவர் திருவள்ளுவர் வேடம் அணிந்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்குச் சென்று மாணவ – மாணவிகளுக்கு திருக்குறள் சொல்லிக் கொடுத்து விளக்கம் அளித்து வருகிறார்.இதுகுறித்து மாணவ – மாணவிகள் கூறும்போது, “திருவள்ளுவர்போல வேடம் அணிந்து திருக்குறள் சொல்லித் தருவதால், அதை கற்பதில் எங்களுக்கு அதிக ஆர்வம் உள்ளது, அத்துடன் அதற்கான விளக்கத்துடனும், சொல்லித் தருவதால், புரிந்துகொள்வதில் சிரமம் இல்லை” என்றனர்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்