வவுனியா அரச-தனியார் பேரூந்து சேவை பிரச்சனைக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் துரித முயற்சியினால் தீர்வு..!!

வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் இருந்து தனியார் மற்றும் இ.போ.ச பேருந்துகள் இணைந்த நேர அட்டவணையில் பயணத்தை தொடர்வதில் காணப்பட்டு வந்த இழுபறி நிலை இன்று இடம்பெற்ற இரு தரப்பு சந்திப்பின் மூலம் வெற்றியடைந்துள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.வவுனியாவில் அமைக்கப்பட்ட புதிய பேருந்து நிலையத்தினால் தொடர்ந்தும் தனியார் மற்றும் இ.போ.ச பேருந்துபணியாளர்களுக்கிடையில் முரண்பாடான நிலைமை காணப்படடு வந்த நிலையில் நீதிமன்றம் வரை இம்முரண்பாடு சென்றிருந்தது.இதற்கு காரணமாக பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்துவது மற்றும் பயணிகளை ஏற்றுவதில் காண்பபட்ட போட்டித்தன்மையே முரண்பாடாக இருந்த நிலையில் வட மாகாண போக்குவரத்து அமைச்சு சில ஆண்டுகளுக்கு முன்னர் இருதரப்பினருடன் உரையாடி இணைந்த நேர அட்டவனையினை நடைமுறைப்படுத்தியிருந்தது. எனினும், அதிலும் உடன்பாடு எட்டப்படாத நிலையில் முரண்பாடான நிலை காணப்பட்டு வந்ததுடன் நீதிமன்ற உத்திரவின் பிரகாரம் இம் முரண்பாடுகள் நிறுத்தப்பட்டு முரண்படுவோருக்கும் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் இணைந்த நேரஅட்டவணையினை மீள் நடைமுறைப்படுத்தும் பட்சத்தில் பயணிகளின் போக்குவரத்து மற்றும் வீதியில் பேருந்துகளுக்கிடையிலான வேகத்தினை கட்டுப்படுத்தும் சாத்தியவளம் உள்ளதை உணர்ந்து கடற்றொழில் நீரியல் வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதன் பிரகாரம் கடந்த வாரம் பேருந்து நிலையத்தினை பார்வையிட்ட இரு தரப்பு சந்திப்புக்கு ஏற்பாடு மேற்கொள்ளுமாறு அமைச்சர் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபருக்கு உத்தரவிட்டிருந்தார். இதன் பிரகாரம் இன்று வவுனியா மாவட்ட செலயகத்தில் வவுனியா அரசாங்க அதிபர் ஐ. எம். ஹனீபா தலைமையில் அமைச்சர் டக்ளஸ்தேவானந்தா நாடாளுமன்ற உறுப்பினர் கே. மஸ்தான்இ ஒருங்கிணைப்பு குழு தலைவர் தர்மபாலசெனவிரத்தின பொலிஸார் உள்ளிட்டவர்களின் பங்குபற்றலுடன் குறித்த கூட்டம் இடம்பெற்ற நிலையில் இரு தரப்பினரும் தமது பக்க விடய்ஙகளை முன்வைத்திருந்தனர்.இதன்போது இ. போ.சவினர் தமது தரப்பில் முடிவுகளை எடுக்க முடியாது எனவும் தமது தலைமைப்பீடமே முடிவெடுக்க வேண்டும் என தெரிவித்த நிலையில் இ. போ.ச தலைமையதிகாரியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடியதையடுத்து இணைந்த நேர அட்டவணைக்கு இணங்கியிருந்தனர்.இந் நிலையில், தனியார்பேரூந்து உரிமையாளர் சங்கம் மற்றும் இ. போ. சுவின் உடன்பாட்டுடன் முன்பு நடைமுறையில் இருந்து நேர அட்டவணையின் பிரகாரம் நாளை செவ்வாய்க் கிழமையில் இருந்து சேவையில் ஈடுபடுவது என முடிவெடுக்கப்பட்டது.இந் நிலையில் கூட்ட முடிவின் பின்னர் புதிய பேரூந்து நிலையத்திற்கு வருகை தந்த அமைச்சர் டக்ளஸ் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கே. மஸ்தான் ஆகியோர் பேரூந்து நிலையத்தினை பார்வையிட்டதுடன், இரு தரப்பு உத்தியோத்தர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டு சேவையினை நாளையிலிருந்து ஒரு சிலவாரத்திற்கு பரீட்சாத்தமாக செயற்படுத்தவும் இதன் போது ஏற்படும் பிரச்சனைகளை சீர்செய்வதாகவும் உறுதியளித்திருந்தனர்.

இந் நிலையில், ஊடகங்களுக்குகருத்து தெரிவித்த அமைச்சர்இபொது இணக்கப்பாட்டில் கடந்த காலத்தில் எடுக்கப்பட்ட இணைந்த நேர அட்டவனையினை நடைமுறைப்படுத்துவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. இரு தரப்பும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து ஒரு ஒழுங்கில் நடைமுறைப்படுத்த அவர்கள் இணங்கியுள்ளனர்.ஆகவே, இரண்டு வாரத்திற்கு இதனைப் பார்த்து பின்னர் இதில் குறைபாடுகள் காணப்படுமாயின் அவற்றை திருத்தம் செய்ய தயாராக இருக்கின்றோம். ஆகவே இன்று எடுக்கப்பட்ட முடிவே நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்