நாட்டு மக்களின் நன்மைக்காக பிரதமர் மஹிந்த எடுத்துள்ள முக்கிய நடவடிக்கை…!!

நாட்டு மக்கள் தமது குறைகளை வெளிப்படையாக தெரிவிக்கலாம் என பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.மக்கள் இலகுவாக தொடர்பு கொள்ளும் வகையில் மக்கள் பிரிவு ஒன்று நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.அலரி மாளிகைக்கு அண்மையில் அமைந்துள்ள இந்த அலுவலகத்தை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார்.இந்த அலுவகலம் இலக்கம் 101, ஆர்.டீ.மெல் மாவத்தை கொள்ளுப்பிட்டி என்ற முகவரியில் அமைந்துள்ளது.பாதிக்கப்படும் எந்தவொரு பொதுமகனும் இங்கு முறையிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.உரிய முறைப்பாடுகள் அமைச்சுகளுக்கும் நிறுவனங்களுக்கும் அனுப்பப்படவுள்ளன. பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்பட்டதா என்பது பற்றியும் கண்டறிய பிரதமர் அலுவலகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்