டெங்கு காய்ச்சலினால் பரிதாபமாகப் பலியான இளம் குடும்பஸ்தர்..! யாழில் சோகம்..!

டெங்கு காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளம் குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் உயிரிழந்ததாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்தன.உயிரிழந்தவர் யாழ்ப்பாணம் கொட்டடிப் பகுதியைச் சேர்ந்த நகுலநாதன் லவன் வயது (30) என்ற மூன்று மாத கைக் குழந்தையின் தந்தையென பொலிசார் தெரிவித்தனர் .மேற்படி குடும்பஸ்தர் திருமணம் செய்து ஒரு வருடங்களே ஆகின்றன. இவருக்கு மூன்று மாதத்தில் பெண் குழந்தை ஒன்றும் உள்ளது. இந்நிலையில் மேற்படி குடும்பஸ்தர் கடந்த 20ஆம் தேதி காய்ச்சலினால் பீடிக்கப்பட்டு இருந்தார்.வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சை பெறுமாறு மனைவி பலதடவை கூறிய போதும் உரிய சிகிச்சை பெறாது வீட்டிலேயே மாத்திரைகளை எடுத்து வந்துள்ளார்.

தொடர்ச்சியான காய்ச்சல் காரணமாக கடந்த 23ஆம் திகதி தனியார் வைத்தியசாலைக்கு சென்று இரத்தப் பரிசோதனை மேற்கொண்டுள்ளார்.இரத்தப் பரிசோதனை அறிக்கையில் டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறி இருப்பதாக கூறப்பட்டது அடுத்து அன்றிரவு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டிருந்தார். 26 ஆம் திகதி மட்டும் பேசிக்கொண்டிருந்தவர் அதன்பின் பேசுவதை நிறுத்தியதாக கூறப்பட்டது.இந்நிலையில், மேற்படி குடும்பஸ்தர் நேற்றிரவு சிகிச்சை பலனின்றி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். இறப்பு விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற் கொணடார். உடற்கூற்றுப் பரிசோதனைக்கு பின், சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. கடந்த பத்து நாட்களுக்குள் யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு உட்பட்ட பகுதியில் டெங்கு காய்ச்சலினால் இருவர் உயிர்இழந்தமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்