பொதிகளை விநியோகம் செய்ய ட்ரோன் வசதி அறிமுகம்..!

பிரான்ஸில் முதன்முறையாக சிறிய பறக்கும் விமானமான ட்ரோன் மூலம் பொதிகளை விநியோகம் செய்யும் வசதி அறிமுகபடுத்தப்பட்டுள்ளது.இந்த விநியோக வசதியினை முதன்முறையாக டி.பி.டி எனும் நிறுவனம் ‘லா போஸ்ட்’ இன் ஒரு பகுதியாக இந்த சேவையினை முன்னெடுக்கின்றது.இசரே மாவட்டத்தில் உள்ள ஃபோண்டானில்-கார்னிலன் எனும் கிராமத்தில் இந்த சேவையை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

கடும் மழை அல்லது பனிப்பொழிவு காலத்தில் பொதிகள், கடிதங்கள் விநியோகம் பெரும் சிரமான விடயம் என்பதால் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.கடல் மட்டத்தில் இருந்து 760 மீற்றர் உயரத்தில் சி.எஸ் கிராமத்திற்கு எட்டு நிமிடத்தில் 2 கிலோ எடையுள்ள பொதியை கொண்டு சேர்க்கின்றது.அதிகபட்சமாக 2 கிலோ எடையை தாங்கிக்கொண்டு ட்ரோன்கள் பறக்கும் எனவும், 31 செ.மீ நீளமும், 10 செ. மீ உயரத்துக்கும் உட்பட்ட பொதிகளை மாத்திரமே, இதனால் கொண்டு பறக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்