அதிபர் ட்ரம்ப் மனைவியின் நிர்வாணப்படங்களை வெளியிட்டது யார்…? புதிய நூலினால் சர்ச்சை..!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் மனைவியும் முதல் பெண்மணியுமான மெலெனியா டிரம்ப் , தனது நீண்ட நாள் சகாவும் டொனால்ட் டிரம்பின் ஆலோசகருமான ரொஜர் ஸ்டோன் என்பவரே தனது நிர்வாணப்படங்களை வெளியிட்டார் என கருதுகின்றார் என்பது புதிதாக வெளியாகியுள்ள நூல் ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.சி.என்.என் செய்தியாளர் கேட் பெனெட் எழுதியுள்ள பிரீ மெலேனியா என்ற நூலில் இந்த விபரங்கள் இடம்பெற்றுள்ளன.இன்று வெளியாகவுள்ள நூலில் தனது நிர்வாணப்படங்கள் வெளியானதற்கு டிரம்ப் காரணமில்லை என மெலேனியா இன்னமும் கருதுகின்றார் என கேட்பெனெட் தெரிவித்துள்ளார்.1996 இல் மெலேனியா மொடலாக விளங்கிய வேளை எடுக்கப்பட்ட படங்கள்,நியுயோர்க் போஸ்டில் 2016 யூலை 30 இல் வெளியாகியிருந்தன.

2016 இல் அந்த படங்கள் குறித்த சர்ச்சையை அலட்சியம் செய்திருந்த டிரம்ப் எனக்கு மெலேனியா அறிமுகமாவதற்கு முன்னரே ஐரோப்பிய சஞ்சிகையிலிருந்து இந்த படங்கள் எடு;க்கப்பட்டுவிட்டன என குறிப்பிட்டிருந்தார்.எனது மனைவி பிரபலமான மொடலாகயிருந்தார் என தெரிவித்திருந்த டிரம்ப், அவர் பல சஞ்சிகைகள் முதல்பக்கங்களிற்காக மொடலாக பணிபுரிந்தார் எனவும் குறிப்பிட்டிருந்தார்.இந்த படங்கள் குறித்தே கேட்பெனெட் குறிப்பிட்டுள்ளார்.இந்தப் படங்களால் மெலேனியா அவமானப்படுத்தப்பட்டதாக உணர்ந்தார்,தோல்வியடைந்தவராக .காயம்பட்டவராக உணர்ந்தார் என கேட்பெனட் குறிப்பிட்டுள்ளார்.மெலேனியா அந்த படங்கள் நியுயோர்க் போஸ்டினை எவ்வாறு சென்றடைந்தன என்பது குறித்து கருத்து தெரிவிக்கவில்லை, ஆனால் டிரம்ப்தான் அதனை செய்தார் என்பதை அவர் இன்னமும் நம்பமறுக்கின்றார் என அவரின் நண்பர்கள் தெரிவிக்கின்றனர் என கேட்பெனெட் தெரிவித்துள்ளார்.ஜனாதிபதியும் முதல் பெண்மணியும் வெள்ளை மாளிகையில்தனித்தனி படுக்கறையறைகளை வைத்துள்ளனர் எனவும் கேட் பெனெட் தெரிவித்துள்ளார்.இதேவேளை இந்தக் கருத்துக்களை, வெள்ளைமாளிகை நிராகரித்துள்ளது.குறிப்பிட்ட நூல் கவலைக்குரிய விதத்தில் பல பிழையான தகவல்களையும் கருத்துக்களையும் உள்ளடக்கியுள்ளது என குறிப்பிட்டுள்ள வெள்ளைமாளிகை முதல்பெண்மணியை அறியாத பலரின் கருத்து நூலில் பதிவாகியுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்