யாழில் தொடரும் கன மழை…43 பேர் பாதிப்பு…13 வீடுகள் சேதம்..!

தொடரும் கனமழையினால் யாழ்.மாவட்டத்தில் 13 குடும்பங்களை சேர்ந்த 43பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு கூறியுள்ளது.குடாநாட்டில் கடந்த 3 நாட்களாக நிலவும் மழையுடன் கூடிய காலநிலையினால் வேலணை பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள புங்குடுதீவு கண்ணகி அம்மன் ஆலயத்தை அண்டிய கடற்கரையோரத்தில் அமைந்திருந்த 7 வாடிகள் சேதமடைந்தமையால் 6 படகுகளும் வலைகளும் சேதமடைந்துள்ளன.இதேபோன்று, மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவின் 3 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்தமையால் 3 குடும்பங்களைச் சேர்ந்த 9 அங்கத்தவர்களும்சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் பிரிவில் 6 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்தமையினால் 6 குடும்பங்களைச் சேர்ந்த 20பேரும், நெடுந்தீவு பிரதேச செயலாளர் பிரிவில் 4 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்த நிலையில் 4 குடும்பங்களைச் சேர்ந்த 14 பேரும், மொத்தம் 13 வீடுகள் சேதமடைந்த காரணத்தினால், 13 குடும்பங்களைச் சேர்ந்த 43 பேர் இடம்பெயர்ந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தகவல்களய் தெரிவிக்கின்றன.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்