இலங்கையின் பணவீக்கத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!!

இலங்கையின் பணவீக்கம் கடந்த நவம்பர் மாதம் பாரிய மாற்றத்துடன் குறைவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தரவுகள் தெரிவிக்கின்றன.

அதனடிப்படையில் நாட்டின் பணவீக்கம் 4.4 விகிதமாக குறைவடைந்துள்ளது.

கடந்த ஒக்டொபர் மாதம் இலங்கையின் பணவீக்கம் 5.3 விகிதமாக காணப்பட்டதுடன் அது முறையே நவம்பர் மாதத்தில் 5.6 விகிதமாக அதிகரித்திருந்தது.

கொழும்பு நுகர்வோர் சந்தையின் விலை சுட்டெண் கடந்த நவம்பர் மாதத்தில் பூச்சியம் தசம் 3 விகிதத்திலேயே உயர்வடைந்திருந்தது.

அதுவே நாட்டின் பணவீக்கம் 4.4 விகிதமாக குறைவடைவதற்கு காரணமாக அமைந்துள்ளது. இருந்தாலும் கடந்த ஒக்டொபர் மாதத்தில் கொழும்பு நுகர்வோர் சந்தையின் விலை சுட்டெண் 131.3 சதவிகிதமாக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

எவ்வாறாயினும் கடந்த 2017 ஆம் நாட்டின் கையிருப்பில் ஏற்பபட்ட பாரிய வீழ்ச்சி பணவீக்கம் அதிகரிக்க காரணமாக அமைந்தது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்