சர்வதேச ரோபாட்டிக்ஸ் போட்டியில் முதலிடம் பிடித்த இலங்கை மாணவர்களின் விசித்திரத் தொப்பி..!!

11வது சர்வதேச ரோபாட்டிக்ஸ் போட்டியில் இலங்கையின் ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் கணினி விஞ்ஞானத் துறை மாணவர்கள் தயாரித்த ஹரிபொட்டர் தொப்பி முதலிடத்தை பிடித்தது.பிரபலமான குழந்தைகள் திரைப்படத் தொடரான ​​ஹரிபொட்டர் திரைப்படத்தில் வரும் தொப்பியின் பெயரில் இந்த தொப்பியை மாணவர்கள் தயாரித்திருந்தனர்.இது 11 வது சர்வதேச ரோபாட்டிக்ஸ் போட்டியில் இடம் பெற்று முதல் இடத்தை வென்றது.தொப்பி பற்றி விளக்கிய பல்கலைக்கழக மாணவர்கள் ‘இந்த தொப்பி முழுமையாக கணினியின் உதவியுடன் செயற்படும். இந்த தொப்பியை யாரும் நெருங்கினால் சென்சர் மூலம் தெரிவிக்கப்படும். மன இறுக்கம் கொண்ட குழந்தைகள் எப்போதும் இயல்பற்றவர்களாக, சமூகத்துடன் இணைந்தவர்களாக செயற்பட மாட்டார்கள். குழந்தைகளிற்கு மன இறுக்கம் இருக்கிறதா என்பதைக் கண்டறியவும் தொப்பி உதவுகிறது. இங்குள்ள கணினியின் செயல்பாடு சாதாரண வாழ்க்கையை அனுபவிக்க உதவுகிறது. சர்வதேச ரோபாட்டிக்ஸ் போட்டி நவம்பர் 26 முதல் 29 வரை ஸ்பெயினின் மாட்ரிட்டில் நடைபெற்றது.ஐரோப்பா, ஆசியா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த பல புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களின் மாணவர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.இதில் இலங்கை மாணவர்களின் ஹரிபொட்டர் தொப்பி முதலிடம் பிடித்தது.நேற்றிரவு இந்த குழுவினர் இலங்கை திரும்பினர். கட்டுநாயக்க விமான நிலையத்தில் மாணவர்களிற்கு வரவேற்பளிக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்