தெற்காசிய விளையாட்டுப் போட்டிக்காக நேபாளத்திற்கு சென்ற இலங்கை வீராங்கனைக்கு டெங்கு….!! வைத்தியசாலையில் அனுமதி..!

13 ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்வதற்காக நேபாளம் வந்திருந்த மேசைப்பந்து வீராங்கனைக்கு டெங்கு நோய் ஏற்பட்டுள்ளதால் அவர் உடனடியாக காத்மண்டுவில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.நேபாளத்தில் நேற்று ஆரம்பமான 13 ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டி விழாவில் இலங்கையிலிருந்து 500 இற்கும் அதிகமான வீர வீராங்கனைகள் கலந்துகொண்டுள்ளனர்.நேபாளத்தில் நிலவும் கடும் குளிர் காரணமாக, வீரர்கள் அவ்வப்போது சுகயீனமடைகின்றனர். இந்நிலையிலேயே, டேபில் டென்னிஸ் வீராங்கனையான திபந்தி பண்டாரவுக்கு டெங்கு நோய்த் தாக்கம் ஏற்பட்டுள்ளது. தற்போது அவர் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்