எது முதலில் வந்தது…கோழியா..? முட்டையா…….தலையைப் பிய்த்துக் கொள்ளும் கேள்விக்கு விடை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்..!

கோழி முதலில் வந்ததா, முட்டை முதலில் வந்ததா என்ற தலையை பிய்த்துக் கொள்ளும் கேள்விக்கு விடை கண்டறிந்துள்ளதாக அறிவித்துள்ளனர் சீன விஞ்ஞானிகள்.சீனாவில் உள்ள The Nanjing Institute of Geology and Paleontology (NIGPAS) வியாழக்கிழமை (28) கோழியா, முட்டையா சர்ச்சைக்கு விடை கண்டறிந்ததாக அறிவித்தது. விஞ்ஞானிகளின் ஆய்வின்படி, முட்டையே முதலில் தோன்றியது என தெரிவித்துள்ளனர்.

609 மில்லியன் ஆண்டுகள் பழமையான புதைபடிவமொன்றை ஆராய்ந்த பின்னர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளனர். உயிரினத் தோற்றம் பற்றிய ஆராய்ச்சியில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.NIGPAS ஆராய்ச்சியாளர்கள் யின் சோங்-ஜுன் (Yin Zong-jun) மற்றும் Zhu Mao-yan சமீபத்தில் பிரிஸ்டல் பல்கலைக்கழகம், ஸ்வீடிஷ் ரோயல் மியூசியம் ஓஃப் நச்சுரல் ஹிஸ்டரி மற்றும் சுவிஸ் லைட் சோர்ஸ் (எஸ்.எல்.எஸ்) ஆகியவற்றுடன் இணைந்து 609 மில்லியன் ஆண்டுகள் பழமையான புதைபடிவமொன்றை கண்டுபிடித்தனர்.சீனாவின் குய்ஷோ மாகாணத்தில், 609 மில்லியன் ஆண்டுகளின் முன்னான பல்லுயிரியான கேவியஸ்பேராவினுடையதை ஒத்த கருவையே கண்டறிந்தனர்.பந்து வடிவத்திலிருந்த அந்த செல் கொத்துக்கள், இன்றைய விலங்குகளின் ஆரம்ப நிலையாக இருக்கலாமென விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.ஆய்வு முடிவுகள் புதன்கிழமை (நவ. 27) இரு வார அறிவியல் இதழான “Current Biology” இல் வெளியிடப்பட்டன. கேவியஸ்பேராவின் கருக்களுடன் குறிப்பிடத்தக்க ஒற்றுமையைப் பகிர்ந்து கொள்வதாகவும், ஒற்றை செல் மற்றும் பலசெல்லுலர் உயிரினங்களுக்கு இடையிலான இடைவெளியை குறைப்பதாகவும், ஆய்வு முடிவுகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக பரிசோதனைகள் இன்னும் செய்யப்பட வேண்டியிருந்தாலும், உயிர் எவ்வாறு வந்தது என்பதை புதைபடிவங்கள் விளக்குகின்றன. இந்தக் கண்டுபிடிப்புகள் உயிரியல் வரலாற்றில் ஒரு புதிய அடித்தளத்தை அமைக்கும் என்று NIGPAS ஆராய்ச்சி குழு தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்