மீன்களை அதிகம் விரும்பி உண்பவர்களுக்கு விடுக்கப்படும் அபாய எச்சரிக்கை..!! உயிருக்கே ஆபத்து..!!

அசைவ உணவுகளில் பிரதானமாக இருக்கும் மீன்களைச் சாப்பிடுவதால் ,உடலில் பல உபாதைகள் வருவதுடன், உயிருக்கு ஆபத்தையும் ஏற்படுத்தும் என்று தெரிய வந்துள்ளது.பலருக்கும் பிடித்தமான உணவுப் பட்டியலில் கட்டாயம் மீன் இடம் பெற்றிருக்கும். ஆனால், தற்போதைய சூழ்நிலையில் மீனை சாப்பிட முடியாத அவல நிலை உருவாகியுள்ளது.குறிப்பாக, கடல் மீன்களில் அதிக நச்சுத் தன்மை நிறைந்துள்ளது. இதற்கு காரணம் கடலில் கொட்டப்படும் கழிவுகள், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் கடலில் கலப்பது தான் என்று ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.
இவ்வாறு கடலில் கலக்கப்படும் ரசாயனங்களினால், மீன்களில் பாதரசம் அதிகரித்து விஷத்தன்மை உடையதாக அவை மாறிவிடுகின்றன. கடல் மீன்களை சாப்பிடுவதால் கர்ப்பிணி பெண்களுக்கு கரு பாதிப்பு ஏற்படும்.குழந்தைகள் இந்த மீன்களை சாப்பிடுவதால், பாதரசம் உடலில் கலந்து ஊட்டச்சத்து குறைபாடு, கண் சார்ந்த பிரச்சனை, மூளை கோளாறு போன்ற பாதிப்புகள் ஏற்படும்.மேலும், ஒவ்வாமை ஏற்பட்டு, சுவாசப் பிரச்சனை முதல் மரணம் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. நடுக்கடலில் கிடைக்கும் மீன்களை உண்டால் விரைவிலேயே உடல் உபாதைகள் ஏற்படும்.ஏற்றுமதி செய்யப்பட்ட கெளுத்தி, இறால், விலாங்கு மீன், கடல் பாஸ் ஆகியவற்றில் பாதரச தன்மை அதிகம் காணப்படும். அத்துடன், நடுக்கடலில் கொட்டப்படும் குப்பைகளினால் சுறா மீன், வாள் மீன், திமிங்கலம் போன்ற மீன்களிலும் விஷத்தன்மை அதிகரித்து நச்சுத்தன்மை ஏற்படுகிறது. இதுபோன்ற நச்சுத்தன்மை கொண்ட கடல் மீன்களை உண்டால் ஆஸ்துமா, புற்றுநோய், இதயம் சார்ந்த நோய்கள், மன அழுத்தம், நீரிழிவு, பார்வை குறைபாடு, மூளை நோய்கள், குடல் கட்டிகள் போன்ற நோய்களும் ஏற்படும்.மீன்களில் பல புரதச்சத்துகள், ஒமேகா கொழுப்பு அமிலங்கள் என நன்மைகள் நிறைந்திருந்தாலும், நச்சுத்தன்மை கலந்த மீன்களை சாப்பிடுவது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும். எனவே, மீனை நன்கு பரிசோதித்த பின்னரே உண்ண வேண்டும்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்