பாகிஸ்தானுடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் மோதும் இலங்கை அணி அறிவிப்பு..!

பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ள இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணிக் குழாமினை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளது.கடந்த 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற லாகூர் தாக்குதலின் பின்னர் இலங்கை கிரிக்கெட் அணியானது பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்வது இது இரண்டாவது தடவையாக அமைந்துள்ளதுடன், அதன் பின்னர் அங்கு டெஸ்ட் போட்டிகளில் கலந்து கொள்ளவுள்ளமை இது முதலாவது சந்தர்ப்பமாகும்.அதன்படி பாகிஸ்தானுக்கு அடுத்த மாதம் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியானது பாகிஸ்தான் கிரிக்கெட் அணியுடன் 2 போட்டிகள் கொண்ட சர்வதேச டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.

முதலாவது போட்டி டிசம்பர் 11 தொடக்கம் 15 ஆம் திகதி வரை ராவல்பிண்டியிலும், இரண்டாவது போட்டி 19 ஆம் திகதி தொடக்கம் 23 ஆம் திகதி வரை கராச்சியிலும் இடம்பெறவுள்ளது.இந் நிலையில், தொடரில் விளையாடும் திமுத் கருணாரத்ன தலைமையிலான 16 பேர் கொண்ட இலங்கை டெஸ்ட் அணிக்குழாமைனை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் விளையாட்டுத்துறை அமைச்சர் டளஸ் அழகப்பெருமவின் ஒப்புதலுடன் வெளியிட்டுள்ளது.

திமுத் கருணாரத்ன – (கப்டன்)  ஓசத பெர்ணான்டோ, குசல் மெண்டீஸ், அஞ்சலோ மெத்தியூஸ்,தினேஷ் சந்திமால், குசல் ஜனித் பெரேரா,  லஹிரு திரிமான்ன, தனஞ்சய டிசில்வா, நிரோஷன் திக்வெல்ல, தில்றூவான் பெரேரா, லசித் எம்புலுதெனிய, சுரங்க லக்மால், லஹிரு குமார, விஷ்வ பெர்ணான்டோ, கசூன் ராஜித, லக்ஷான் சந்தகான்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்