சிறிய ரக உலங்கு வானூர்த்தியை தயாரித்து சாதனை படைத்த இலங்கைப் பாடசாலை மாணவன்..!!

இலங்கை பாடசாலை மாணவன் ஒருவரினால் சிறிய ரக உலங்கு வானூர்த்தி ஒன்று வெற்றிகரமாக தயாரிக்கப்பட்டுள்ளது.இரத்தினபுரி மாவட்டத்தை சேர்ந்த மாணவனாலேயே இந்த உலங்கு வானூர்த்தி தயாரிக்கப்பட்டுள்ளது.மாணவனினால் தயாரிக்கப்பட்ட உலங்கு வானூர்த்தி நேற்று பாடசாலை மைதானத்தில் சோதனை ஓட்டத்திற்கு உட்படுத்தப்பட்டது.குருவிட்ட மத்திய மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் தருஷிக்க என்ற மாணவன் தனது நீண்ட கால இலட்சியமான இந்த உலங்கு வானூர்த்தியைத் தயாரித்துள்ளார்.மாணவனின் முயற்சிக்கு பல்வேறு தரப்பினர் தங்கள் வாழ்த்தினை தெரிவித்துள்ளனர்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்