கிளிநொச்சி பேரூந்து நிலையத்தின் பரிதாப நிலை…பெரும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுக்கும் பயணிகள்!

யுத்தம் நிறைவடைந்து பத்து வருடங்கள்… கிளிநொச்சி பேரூந்து நிலையத்தின் பரிதாப நிலை… பெரும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுக்கும் பயணிகள்…!கிளிநொச்சி மாவட்டத்தில் சாபக்கேடாக அதன் மத்திய பேருந்து நிலையம் இருப்பதாக மாவட்ட மக்களும் பயணிகளும் கவலை தெரிவித்துள்ளனர் .

மீள்குடியேற்றம் செய்யப்பட்டு 10 வருடங்கள் ஆகின்ற போதும் கிளிநொச்சி மாவட்டத்தில் இதுவரைக்கும் நிரந்தரமான பேருந்து நிலையம் ஒன்று அமைக்கப்படவில்லை. கிளிநொச்சி டிப்போ சந்திக்கு அருகில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணியை கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட போதும், அதன் பணிகள் முழுமையாக முடிக்கப்படாது இடைநடுவில் கைவிடப்பட்டு காணப்படுகிறது.குறித்த பகுதி தற்போது சேரும் சுரியுமாக மழை நீர் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுவதோடு,சுகாதாரச் சீர்கேட்டையும் ஏற்படுத்தி வருகிறது. இதனைச் சூழவும் தேனீர் கடைகள் உட்பட பல உணவுப் பண்டங்களை விற்பனை செய்யும் கடைகளும் காணப்படுகின்றன.அத்தோடு பயணிகள் மழை நேரங்களில் பாதுகாப்பாக ஒதுங்கி சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வாழ்கின்ற கிளிநொச்சி மாவட்டத்தில் ஒரு நிரந்தர பேருந்து நிலையம் இல்லாமை, நிற்பதற்குக் கூட இடம் இன்றி அவதிப்படுவதனையும்,காணக் கூடியதாக உள்ளன.சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வாழுகின்ற கிளிநொச்சி மாவட்டத்தில், ஒரு நிரந்தர பேருந்து நிலையம் இல்லாமையும், இடைநடுவில் கைவிடப்பட்டுள்ள பேருந்து நிலையத்தை முழுமையாக அமைத்து முடிப்பதற்கு மாவட்டத்தில் உள்ள அரசியல்வாதிகள் முதல், அதிகாரிகள் வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது, மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.எனவே, மாவட்டத்தின் நலன்கருதி குறித்த பேருந்து நிலையத்தை விரைவாக அமைத்து முடிப்பதற்கு, உரிய தரப்பினர்கள் கவனம் செலுத்த வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்