அடுத்த 24 மணி நேரத்தில் ராஜினாமா செய்கிறார் பிரதமர் ரணில்…!! மிக விரைவில் பொதுத் தேர்தல்..!!

அடுத்த 24 மணி நேரத்திற்குள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது பதவியை இராஜினாமா செய்வார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.இதேவேளை நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு ஐக்கிய தேசிய முன்னணி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்கும் என சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷமன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.நேற்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போதே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என லக்ஷமன் கிரியெல்ல தெரிவித்தார்.

கோட்டாபய ராஜபக்ஷவினை சந்தித்த பின்னர், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது இராஜினாமா குறித்து அறிவிப்பார் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.இதேவேளை சபாநாயகர், கட்சித் தலைவர்கள் மற்றும் அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடிய பின்னர் அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்