சற்று முன்னர் சஜித் பிரேமதாச விடுத்துள்ள அறிவிப்பு…!

ஏழாவது நிறைவேற்று அதிகாரம் மிக்க ஜனாதிபதியாகத் தெரிவாகவுள்ள கோட்டாபய ராஜபக்ஸவிற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்த சஜித் பிரேமதாச, தாம் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் பதவியிலிருந்து இராஜினாமா செய்வதாகவும், மக்கள் சேவைக்காக தொடர்ந்தும் செயற்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் முடிவுகளில் கோத்தபாய முன்னிலையிலிருப்பதை அடுத்து தனது அனைத்துப் பதவிகளிலிருந்தும் சஜித் பிரேமதாச விலகியுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்றைய தினம் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலுக்கான முடிவுகள் இரவிலிருந்து வெளியாகிக் கொண்டிருக்கின்றன.இந்நிலையில், கோத்தபாய ராஜபக்ச முன்னிலையில் இருப்பதையடுத்து சஜித் பிரேமதாச தனது அனைத்துப் பதவிகளிலிருந்தும் விலகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்