ஒரே நாளில் பிறந்து, ஒரே நாளில் திருமணம் செய்யும் சகோதர சகோதரிகள்..!!

ஒரே நாளில் பிறந்த ஐவர்……..ஒரு ஆண் 4 சகோதரிகள்… ஒரே நாளில் திருமணம்… தாய் நெகிழ்ச்சி...கேரளாவில் ஒரே நாளில் பிறந்த 4 பெண்கள் மற்றும் ஒரு ஆண் என 5 பேருக்கும், குருவாயூரிலுள்ள ஸ்ரீகிருஷ்ணா கோவிலில் வரும் ஏப்ரல் 26, 2020 அன்று திருமணம் நடைபெறவுள்ளது.சகோதரிகள் உத்ராஜா, உத்தாரா, உத்தமா, உத்ரா மற்றும் சகோதரன் உத்ராஜன் ஆகிய 5 பேரும் 1995 நவம்பர் 18 அன்று பிறந்தனர்.வியாபாரியான அவரது தந்தை, அவர்களுக்கு ஒரே மாதிரியான உடை, பை, குடை போன்றவற்றை கடைகளில் வாங்க சிரமப்பட்டார். உடமைகள் அனைத்தும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என அவரது தந்தை விரும்பினார்.

இந்நிலையில், அவரது மனைவிக்கு இருதய பிரச்சினை ஏற்பட்டபோதுஇ குடும்பம் ஒன்றன் பின் ஒன்றாக பணப்பிரச்சனையில் சிக்கியதால் குழந்தைகள் பிறந்த 9 ஆண்டுகளுக்குப் பிறகு அவரது கணவர் 2004இல் தற்கொலை செய்துகொண்டார். இந்த சோகத்தில் மூழ்கிய அவரது மனைவி, தனது 5 குழந்தைகளை வளர்த்து படிக்க வைக்க விரும்பினார்.தற்போது, அந்த குழந்தைகளுக்கு 24 வயது. ஒரு மகள் ஆடை வடிவமைப்பாளர் 2 பேர் மயக்க மருந்து வல்லுநர்கள், மற்றவர் இணைய எழுத்தாளர். அவர்களின் சகோதரர் உத்ராஜன் ஒரு டெக்னீசியனாக இருக்கிறார்.

திருவனந்தபுரத்தில் உள்ள மாவட்ட கூட்டுறவு வங்கி கிளையில் நான்காம் வகுப்பு ஊழியராக பணிபுரியாற்றி வரும் அந்தப் பெண்மணி கூறும்போது, எனது கணவர் உயிருடன் இருந்தபோது, 5 பேருக்கும் சம வாய்ப்பும் சிகிச்சையும் கிடைக்க வேண்டும் என்பதில் விருப்பம் கொண்டிருந்தார். அவரது கனவை நிறைவேற்றும் வகையில், என் பிள்ளைகளுக்கு ஒரே நாளில் திருமணம் செய்துவைக்க முடிவு செய்தேன் எனவும் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்