பணிக்குச் சென்ற இடத்தில் காதல்… அமெரிக்கப் பெண்ணை இந்துமத முறைப்படி திருமணம் செய்த தமிழன்..!!

3 ஆண்டுகளாக காதலித்து வந்த அமெரிக்கப் பெண் ஒருவரை இந்து முறைப்படி தமிழன் ஒருவர் மணமுடித்துள்ளார்.இந்தியாவில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள தட்டடி புதூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் செல்லையா – தவமணி தம்பதியினர். இவர்களது மகன் கந்தசாமி ஆராய்ச்சிப் படிப்புக்காக அமெரிக்காவில் உள்ள சிக்காக்கோ சென்று தற்போது அமேசன் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

இவருக்கு அமெரிக்காவில் காப்பீட்டு நிறுவனத்தில் பணிபுரிந்த எலிசபெத் என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்ப்பட்டு, நாளடைவில் அது காதலாக மாறியுள்ளது. மூன்றாண்டுகளாக காதலித்து வந்தவர்கள் 5 நாள்களுக்கு முன்பு தமிழகம் வந்தனர். இந்நிலையில், பெற்றோர்களின் சம்மதத்துடன், கந்தசாமி எலிசபெத்தை தமிழகப் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு கந்தசாமியின் உறவினர்கள் மற்றும் அருகில் உள்ள கிராமத்தினர் அனைவரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளனர்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்