நுவரெலியாவில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கூட்டம்..!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் நுவரெலியா பகுதிக்கான பிரசார கூட்டம் நுவரெலியா நகர மத்தியில் நடைபெற்றது.ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.பி.ரத்நாயக்க தலைமையில் இன்று (சனிக்கிழமை) இந்த தேர்தல் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ, ஜி.எல்.பீரிஸ், ஆறுமுகன் தொண்டமான், விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, திலும் அமுனுகம, த்திய மாகாண முன்னாள் அமைச்சர்களான எம்.ரமேஷ்வரன், நிமல் பியதிஸ்ஸ மற்றும் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர். இதன்போது, ஐக்கிய தேசியக் கட்சியினுடைய நுவரெலியா மாவட்ட இளைஞர் அணியுனுடைய செயலாளர் திரு. மணித் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து கொண்டார்.பெருமளவான ஆதரவாளர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்