புனர்வாழ்வளிக்கபட்ட முன்னாள் போராளிகளுக்கு மாதாந்தம் 20, 000 ரூபா கொடுப்பனவு..!! ஜே.வி.பி ஜனாதிபதி வேட்பாளர் அனுரவின் அதிரடி அறிவிப்பு..!!

இலங்கையில் இடம்பெறப் போகும் பாரிய மாற்றத்திற்கான ஜனாதிபதி தேர்தலின் பலம் பெறும் சக்தியாக உருவெடுத்துள்ள தேசிய மக்கள் சக்தி கட்சியின் சார்பில் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளரான அனுர குமார திசாநாயக்க, தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் போரில் பாதிக்கப்பட்டு உயிர் மற்றும் உடல் பாகங்களை இழந்த குடும்ப தலைவர்களுக்கு மாதாந்தம் 20,000  ரூபா  கொடுப்பனவு தரப்போவதாக அறிவித்திருப்பது வடக்கு கிழக்கு மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருகின்றது.இந்த அறிவிப்பானது இலங்கை வரலாற்றில் எந்த ஒரு ஜனாதிபதி வேட்பாளரும் அறிவிக்காத அறிவிப்பாகவே மக்கள் கருதுகின்றனர். ஏற்கனவே இரண்டு அரசாங்கங்களும் மாறி,மாறி ஆட்சி செய்து வடக்கு கிழக்கில் எவ்வித அபிவிருத்தி பங்களிப்பை பெரிதும் ஏற்படுத்தாத நிலையில் இருந்து,இவ்வாறான அறிவிப்பை வடக்கு கிழக்கு மக்களின் வாழ்வாதார நலனில் அக்கறை கொண்டு அறிவிப்பை ஏற்படுத்தியிருப்பது அனைவரினதும் கவனத்தை வெகுவாக ஈர்த்திருக்கின்றது எனலாம்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்