அயோத்தியில் ராமர் கோயில் கட்டலாம்.!! இந்திய உச்ச நீதிமன்றம் பரபரப்புத் தீர்ப்பு..!!

மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட அயோத்தி வழக்கின் தீர்ப்பை அறிவித்துள்ளது இந்திய உச்சநீதிமன்றம்.இதன்படி அயோத்தியில் ராமர் கோயில் கட்டலாம் என்று உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பை வெளியிட்டுள்ளது.அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்ற வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது.

சமரசக் குழுவின் முயற்சி தோல்வி அடைந்த நிலையில், 40 நாட்கள் தொடர்ந்து விசாரணை நடைபெற்றது. இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், தேதி, குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்திருந்தனர். இந்நிலையில், இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கி வருகிறது.

அயோத்தியில் பாபர் மசூதி, வெற்றிடத்தில் கட்டப்படவில்லை என்றும், பாபர் மசூதியின் அடித்தளத்தில் இருக்கும் அமைப்பு இஸ்லாமிய முறைப்படி கட்டப்படவில்லை எனவும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்ற வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த நிலையில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு இன்று (சனிக்கிழமை) தீர்ப்பு வழங்கியுள்ளது.ரஞ்சன் கோகாயின் தீர்ப்பின் படி, பாபர் மசூதி மிர்பாகியால் கட்டப்பட்டது என்றும், இறையியல் விவகாரங்களில் நீதிமன்றம் தலையிடுவது சரியானதல்ல எனவும் தெரிவித்தார்.அத்துடன், ஒரு பிரிவினரின் நம்பிக்கையை மறு பிரிவினர் மறுக்க முடியாதுமசூதியில் 1949-ம் ஆண்டில் சிலைகள் வைக்கப்பட்டன. மதச்சார்பின்மையே அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை அதன்படியே உச்சநீதிமன்றம் அமைக்கப்பட்டது என்றும் கூறினார்.

தொல்லியல் துறை ஆதாரங்களை புறக்கணிக்க முடியாது எனத் தெரிவித்த அவர், தொல்லியல் துறை ஆதாரங்கள் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவையாக காணப்படுவதாகவும் குறிப்பிட்டார்.அயோத்தியில் காலியிடத்தில் பாபர் மசூதி கட்டப்படவில்லை. பாபர் மசூதியில் அடித்தளத்தில் இருக்கும் அமைப்பு இஸ்லாமிய முறைப்படி கட்டப்படவில்லை என ரஞ்சன் கோகாய் குறிப்பிட்டுள்ளார்.

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, அசோக் பூஷண், டி.ஒய்.சந்திரசூட், எஸ்.அப்துல் நஸீர் ஆகியோரை கொண்ட அமர்வு இந்தத் தீர்ப்பை வழங்கியது. அனைத்து நீதிபதிகளும் ஒரே தீர்ப்பை வழங்கினர். சன்னி பிரிவுக்கு ஷியா வக்ப் வாரியம் தொடர்ந்து மேல் முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. தலைமை நீதிபதி தீர்ப்பில் கூறியதாவது;

1857-க்கு முன் வரை இந்துக்கள் சர்ச்சைக்குரிய கட்டடத்தில் வழிபட தடை இல்லை.1857-ல் கட்டடத்தின் உள் பகுதிக்கும் வெளிப்பகுதிக்கும் இடையே தடுப்புகள் உருவாக்கப்பட்டன.பாபர் மசூதி இருந்த இடம் முழுக்க முழுக்க தங்கள் இடம் என இஸ்லாமிய அமைப்புகள் நிரூபிக்கவில்லை.1992 ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டது உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மீறிய செயல்.

இஸ்லாமியர்களுக்கு மாற்று நிலம் வழங்க வேண்டும். வக்பு போர்டு ஏற்கும் இடத்தில் 5 ஏக்கர் நிலம் தர மத்திய, மாநில அரசுகள் வழங்க வேண்டும். அதை 3 மாத காலங்களுக்குள் வழங்கப்படும் தீர்ப்பை செயல்படுத்த வேண்டும்.சர்ச்சைக்குரிய இடத்தில் கோயில் கட்ட, ஒரு அமைப்பை மூன்று மாதங்களுக்குள் உருவாக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த தீர்ப்பு இன்றையதினம் வெளியாகவிருந்தநிலையில், உத்தரபிரதேசத்தில் கடும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்