தமது அபாரமான ஆட்டத்தினால் அரையிறுதிக்கு முன்னேறிய வட மாகாண ஆண்கள் ஆசிரியர் அணி.!!

இலங்கை அரசாங்க சேவை விளையாட்டுச் சங்கம் நடாத்தும் அரச உத்தியோகத்தர்களுக்கான வலைப்பந்தாட்டத் தொடரில் வடமாகாண ஆண்கள் ஆசிரியர் அணி அரையிறுதி ஆட்டத்திற்குத் தகுதி பெற்றுள்ளது.நேற்று (05) கொழும்பு டொறின்ரன் விளையாட்டு கழக மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் வடமாகாண ஆண்கள் ஆசிரியர் அணி குழுப் போட்டிகளில் காலி பிரதேச செயலக அணியை 22:0 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றும், பாதுகாப்பு உத்தியோகத்தர் அணியை 14:4 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றும் அரையிறுதியாட்டத்திற்குத் தகுதி பெற்றுள்ளது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்