யாழில் ஆரம்பிக்கப்பட்டுள்ள விசித்திர உணவகம்..!! உண்பதற்கு படையெடுக்கும் வாடிக்கையாளர்கள்.!!

உலகில் பல கோடி மக்கள் அன்றாடம் ஒரு வேளையேனும் உண்பதற்கு உணவில்லாமல் பசியுடன் உறங்கச் செல்வதாக ஐக்கிய நாடுகள் சபையின் புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.ஆப்பிரிக்க தேசத்தில் மட்டும் லட்சக்கணக்கான சிறுவர்கள் பட்டினியால் வாடுவதாக அண்மையில் வெளிவந்த தகவல்கள் கூறுகின்றன. இந்த வேளையில், உணவுகள் வீணாக கொட்டப்படுவதை யாராலும் ஏற்க முடியாது.கடவுளும் பொறுத்துக் கொள்ள மாட்டார். மிகவும் இயன்ற வரை நாம் அன்றாடம் உண்ணும் உணவுகளில் மீதமிருந்தால் அதனை பிறருக்கும் கொடுத்து, நாய் போன்ற வீட்டில் வாழும் பிராணிகளுக்கும் கொடுத்து உண்பதே சாலச் சிறந்தது.

இதனை உணர்ந்த யாழ் உணவக நிர்வாகி ஒருவர், இதனை தமது உணவகத்தில் உணவு வீண் விரயம் செய்யப்பபடுவதை தடுத்து வாடிக்கையாளர்களுக்கு சிறந்த முறையில் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார் .அதாவது உணவுகள் வீண் விரயம் செய்யப்படுவதை தடுக்கும் நோக்கில் குறித்த உணவகம் தமது வாடிக்கையாளர்களுக்கு சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. இதனால், தமது உணவகத்தில் உணவுகள் வீண் விரயமாகுதல் தடுக்கப்பட்டுள்ளதாக உணவக நிர்வாகிகள் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.நீங்கள் கேட்கும் உணவுகளை மிகுதி விடாமல் எடுத்துக் கொள்ள வேண்டும் . தட்டில் உணவு மீதி இருக்குமானால், அதற்கு மேலதிக பணம் செலுத்த வேண்டும் என்ற நிபந்தனைகளின் அடிப்படையிலேயே உணவகத்திற்குள் வாடிக்கையாளர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.இதனால்,வாடிக்கையாளர்கள் தமக்கு வேண்டிய உணவு வகைளைகளை அளவாக தேர்ந்தெடுத்து உண்ணமுடியும். ஆனால், உணவுத் தட்டில் மிகச் சிறிதேனும் மீதி இருக்கக் கூடாது.இது தான் விதி. இந்த சிறந்த திட்டத்தை நடைமுறைப்படுத்திய உணவக உரிமையாளருக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் வந்து குவிகின்றன.இதனை, ஏனைய உணவகங்களும் பின்பற்றி நடந்தால், உணவு வீணாக மீதமாகுவதை பெருமளவில் தடுக்கலாம்.பின்பற்றுவார்களா…?

 

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்