கோத்தபாயவின் வெற்றிக்காக வடக்கில் களமிறங்கிய மக்கள் மனம் கவர்ந்த முன்னாள் இராணுவ அதிகாரி..!!

சில காலத்தின் முன் கண்ணீர், மாலை, மரியாதை, இனஐக்கியம் என சமூக வலைத்தளங்களை தெறிக்க விட்ட, சிவில் பாதுகாப்பு பிரிவின் அதிகாரி கேணல் ரத்னப்பிரிய பாண்டு, கோட்டாபய ராஜபக்சவிற்காக களமிறங்கியுள்ளார்.செய்தியாளர்களை சந்தித்த ரத்னப்பிரிய இந்தத் தகவலை தெரிவித்தார்.நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை பகிரங்கமாக அறிவித்துள்ளார். வடக்கிலுள்ள இளைஞர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, கோட்டாவிற்காக வடக்கில் பிரச்சாரப் பணிகளில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார்.சுமார் ஒரு மாதத்தின் முன்னர் வடக்கை சேர்ந்த இளைஞர்கள் குழுவொன்று என்னைச் சந்திக்க வந்தது.

அவர்கள் என்னிடம் கதைக்கும் போது, ஆறு வருடங்களாக எம்முடன் சேவையாற்றிய நீங்கள் எம்மை விட்டு செல்லும் போது உங்களை மீண்டும் எமது பகுதிக்கே தருமாறு கேட்டோம்.நாங்கள் அவ்வாறு கேட்டது எம்மோடு யுத்தம் புரிந்த தெற்கை வதிவிடமாக கொண்ட ஒரு சிங்கள பௌத்த அதிகாரியை.

எமது அந்த கோரிக்கையை கூட ஏற்றுக் கொள்ளாதவர்கள் வெறுமனே வாக்குறுதிகளை மட்டும் தருகின்றார்கள்.ஆனால், எதனையும் நிறைவேற்றி தர மாட்டார்கள். அதனால் அவர்கள் மீது எமக்கு நம்பிக்கை இல்லை.அதனால், நாம் கோத்தபாயவிற்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளோம் என குறிப்பிட்டனர்.அதனால் தான் கட்டாயமாக கோத்தபாயவை வெற்றி பெற செய்ய வேண்டும் என்று நான் தீர்மானித்தேன்.அதற்காக எவ்வளவு கஷ்டப்பட வேண்டுமோ அவ்வளவு கஷ்டப்பட்டு பணியாற்றுவோம். விசேடமாக வடக்கு, கிழக்கு மக்களுடன் இணைந்து எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் விஸ்வமடு இராணுவ முகாமிலிருந்து, அம்பேபுஸ்ஸ முகாமிற்கு இடமாற்றம் பெற்ற நிலையில் விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் மற்றும் விஸ்வமடு மக்கள் ஆகியோர் கண்ணீருடன் கேர்ணல் ரத்தனபிரிய பந்துக்கு பிரியாவிடை கொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

சேர், கோட்டாபய ராஜபக்சவின் வெற்றிக்கு நீங்கள் ஏதாவது செய்ய வேண்டும். அவரது வெற்றிக்கு நாம் என்ன செய்வது? என கேட்டனர்.நீங்கள் ஏன் அந்த முடிவை எடுத்தீர்கள் என்று நான் உங்களிடம் கேட்டேன். ”சேர்.. இந்த அரசாங்கத்திடம் பல விடயங்களை கேட்டோம்.ஒன்றும் நடக்கவில்லை. நாங்கள் தனிச்சட்டத்தையோ, தனி நாட்டையோ கேட்கவில்லை.எங்களுடன் போரில் ஈடுபட்ட தெற்கிலுள்ள சிங்கள பௌத்தர்களிடம், எங்கள் வாழ்க்கையைப்பற்றித்தான் கேட்டோம்.எங்கள் நாட்டை ஒப்பந்தம் செய்து விற்கத்தான் முயல்கிறார்கள். ஒப்பந்தங்களால் நாட்டின் பாதுகாப்பு பாதிக்கப்படுகிறதென்றால், நாமும் ஒரு முடிவை எடுக்க வேண்டும் என்றனர் எனவும் கேணல் ரத்னப்பிரிய பாண்டு மேலும் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்