பொதுமக்களுக்கு கிடைத்த ஏமாற்றம்….முக்கிய கலந்துரையாடல்களை தவிர்த்து வரும் கோத்தபாய…!

அனைத்து பிரதான ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர்களின் பங்குபற்றுதலுடன் நேற்று நடைபெற்ற வணிக சமூகத்தின் சந்திப்பில் பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ கலந்துகொள்ளவில்லை.ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்கள் மற்றும் வணிக சமூகத்தினரிடையே கலந்துரையாடல் போன்ற அமைப்பில் நடைபெற்ற இந்த சந்திப்பு இலங்கை சர்வதேச வர்த்தக சபையின் அனுசரணையில் நடைபெற்றது.இதில் ஜனாதிபதி வேட்பாளர்களான சஜித் பிரேமதாச, அனுரகுமார திஸாநாயக்க, கலாநிதி அஜந்தா பெரேரா, மற்றும் கலாநிதி ரொஹான் பல்லேவத்த ஆகியோர் கலந்து கொண்டனர்.

அத்துடன், மகேஷ் சேனாநாயக்கவிற்கு பதிலாக அவரது கட்சியின் செயலாளர் காமினி குணவர்த்தன கலந்துகொண்டார்.இந்நிலையில், கோட்டாபய ராஜபக்ஷ இந்த சந்திப்பில் கலந்துகொள்ள இயலாது என தகவல் மாத்திரம் அனுப்பியிருந்ததாக தெரியவருகின்றது.இதேவேளை இதற்கு முன்னர், அனைத்து ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்களின் பங்குபற்றுதலுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் கோட்டாபய ராஜபக்ஷ வருகைதரவில்லை.இந் நிலையில், பொது விவாதத்திற்கு அழைப்பு விடுத்த சஜித் பிரேமதாசவின் சவாலையும், கோத்தபாய ராஜபக்க்ஷ தவிர்த்து வருகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்