யாழ் நகரில் இன்றைய தங்க விற்பனை நிலவரம் எப்படி?

யாழ்ப்பாணத்தில் இன்று (நவ.8) வெள்ளிக்கிழமை தங்கத்தின் விலை
பவுணுக்கு 700 ரூபாவால் சரிவடைந்துள்ளது.சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் நிலவி வருகின்றது.இதன் எதிரொலியாக, இலங்கையிலும் தங்கத்தின் விலையில் மாற்றம் உண்டாகின்றது.யாழ்ப்பாணத்தில் நேற்று 22 கரட் தங்கம் பவுணுக்கு 67 ஆயிரத்து 800 ரூபாவுக்கு விற்கப்பட்டது. இன்று ஆபரணத் தங்கத்தின் விலை பவுணுக்கு 700 ரூபா குறைவடைந்து பவுண் ஒன்று 67 ஆயிரத்து 100 ரூபாவுக்கு விற்கப்படுகிறது.

24 கரட் தூய தங்கத்தின் விலை: இன்றைய காலை நிலவரப்படி, யாழ்ப்பாணத்தில் 24 கரட் தூய தங்கத்தின் விலை பவுணுக்கு 600 ரூபா குறைவடைந்துள்ளது. அதன்படி, தூய தங்கம் 73 ஆயிரத்து 200 ரூபாவாகக் காணப்படுகின்றது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்