அணித்தலைவர் பதவியை எதிர்பார்த்திருக்கவில்லை.. இன்ப அதிர்ச்சியில் பேசத் தடுமாறும் மொமினுல் ஹக்யூ ..!!

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் புதிய டெஸ்ட் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள மொமினுல் ஹக்யூ, தான் இன்னமும் அணித்தலைவர் பதவிக்கு தயாராகவில்லை என கூறியுள்ளார்.

இந்தியாவுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் அணி, இந்தியா அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடர் மற்றும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகின்றது.இந்த நிலையில், இத்தொடர் ஆரம்பமாவதற்கு முன்னர், அணியின் தலைவராக ஷகிப் அல் ஹசன் நியமிக்கப்பட்டிருந்தார்.

ஆனால், ஐ.சி.சி. இன் இரண்டு ஆண்டுகள் தடை காரணமாக பங்களாதேஷ் ரி-20 கிரிக்கெட் அணிக்கு மெஹ்முதுல்லாவும், டெஸ்ட் அணிக்கு மொமினுல் ஹக்யூ உம் தலைவர்களாக நியமிக்கப்பட்டனர்.இந்த நிலையில், அணித்தலைவர் பதவிக்கு தான் இன்னமும் தயாராகவில்லை என மொமினுல் ஹக்யூ கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ”நான் அணித்தலைவர் பதவிக்கு தயாராகவில்லை. இது முற்றிலும் எதிர்பார்க்காதது. பங்களாதேஷ் அணியின் அணித்தலைவராகவோ அல்லது டெஸ்ட் அணி அணித்தலைவராகவோ நியமிக்கப்படுவேன் என்று கனவில் கூட நினைத்தது கிடையாது.விராட் கோஹ்லி உலகின் தலைசிறந்த வீரர். அனைத்து வகை கிரிக்கெட்டிலும் அவர் சிறந்தவர். இதைப் பற்றி நினைக்கும்போது, எனக்கு சிறந்த உணர்வாக இருக்கிறது” என கூறினார்.

இதுவரை இரு அணிகளுக்கிடையில் இரண்டு ரி-20 போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், இத்தொடர் 1-1 என்ற கணக்கில் சமிலைப் பெற்றுள்ளது.மேலும், ஐ.சி.சி. டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் ஒரு அங்கமாக நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி, பகலிரவு டெஸ்ட் போட்டியாக நடைபெறவுள்ளது. இப் போட்டியின் ஊடாக இரு அணிகளும் முதல்முறையாக இளஞ் சிவப்பு நிற பந்தில் பகலிரவு டெஸ்ட் போட்டி விளையாடவுள்ளமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்