உங்கள் கழுத்தின் வடிவத்தில் ஒளிந்திருக்கும் உங்களைப் பற்றிய ரகசியங்கள் இது தானாம்..!! அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்…

நமது உடலின் ஒவ்வொரு உறுப்பும் நம்முடைய ஆளுமையைப் பற்றி கூற இயலும். ஒருவர் நல்லவரா அல்லது கெட்டவரா, அவரின் புத்திசாலித்தனம் எவ்வளவு, அவர் எவ்வளவு கோபப்படக்கூடியவர், அவர் பொய் கூறுவாரா இல்லையா என அனைத்தையும் உங்கள் உடலின் உறுப்புகளின் வடிவத்தையும், அளவையும் கொண்டே கண்டறிந்து விடலாம்.நமது ஆளுமையை பிரதிபலிக்கும் முக்கியமான உறுப்புகளில் ஒன்று நமது கழுத்து ஆகும். நமது தலையைத் தாங்கும் கழுத்துக்கு என்று சில சிறப்புகள் உள்ளது. ஒவொருவருக்கும் அவர்களின் கழுத்தின் வடிவமும், அளவும் மாறுபடும். இந்த ஒவ்வொரு மாற்றங்களும் நமது ஆளுமையைப் பற்றி கூறுவதாகும். இந்த பதிவில் உங்கள் கழுத்து கூறும் உங்களின் உண்மையான குணங்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.

நேரான கழுத்து என்பது பலருக்கும் இருக்கும் ஒரு வடிவமைப்பாகும். இந்த அமைப்பில் கழுத்து இருப்பவர்கள் எப்பொழுதும் தங்களை நினைத்து பெருமை கொள்பவர்களாக இருப்பார்கள், மேலும் நேரம் தவறாமை எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் தங்கள் கொள்கைகள் மீது எப்போதும் பிடிப்புடன் இருப்பார்கள்.நீண்ட கழுத்து: வழக்கமான நீளத்தை விட கழுத்து நீளமாக இருந்தால் அவர்கள் மிகவும் அதிகமாக பேசக்கூடியவர்களாக இருப்பார்கள், மேலும் இவர்களுக்கு நடுக்கம், மனசோர்வு போன்ற குறைகள் இருக்க வாய்ப்புள்ளது. தங்களைப் பற்றி எப்பொழுதும் பெருமை பேசி கொண்டிருப்பதால் இவர்களுக்கு உதவிகள் பெரும்பாலும் கிடைக்காது.

கழுத்து வழக்கத்தை விட சிறியதாக இருந்தால் அவர்கள் தனித்துவமானவர்கள். இவர்கள் உள்முக சிந்தனைக் கொண்டவர்களாக இருப்பார்கள், கடின உழைப்பாளிகளாகவும், சுயநலம் அதிகம் உள்ளவர்களாகவும், புத்திசாலிகளாகவும், நம்பிக்கை குறைவாவர்களாகவும், ஆணவம் அதிகம் உள்ளவர்களாகவும் இருப்பார்கள்.

தடிமனான கழுத்துக் கொண்டவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள். ஏனெனில் இவர்கள் ஊழல்வாதிகளாகவும், மதுவிற்கு அடிமையாகக் கூடியவர்களாவும், மற்றவர்களின் மீது சந்தேகம் மற்றும் பொறாமை கொண்டவர்களாகவும், கோபமும், ஆக்ரோஷமும் அதிகம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களிடம் மிகவும் எச்சரிக்கையாக பழக வேண்டியது அவசியம்.

வறட்சியான கழுத்து: இந்த வகையான கழுத்து கொண்டவர்களுக்கு கழுத்தில் சதை இல்லாதது மற்றும் நரம்புகள் தெளிவாக தெரியும். இப்படிப்பட்டவர்கள் மந்தமானவர்களாக இருப்பார்கள், இவர்களுக்கு இலட்சியம் என்று பெரிதாக எதுவும் இருக்காது, சோம்பேறி மற்றும் அபத்தமான காரணங்களுக்காக கோபப்படக்கூடியவராக இருப்பார்.

ஒட்டகம் போன்ற கழுத்து: இந்த வகையான கழுத்து நீளமாகவும் மெல்லியதாகவும் இருக்கும். இந்த வகையான கழுத்து உள்ளவர் பொறுமையாகவும், மேம்பட்டவராகவும், கடின உழைப்பாளராகவும் இருக்க வாய்ப்புள்ளது. இந்த வகை கழுத்து கொண்டவர்களுக்கு இயற்கையாகவே நயவஞ்சக எண்ணம் அதிகமாக இருக்கும்.சீரான கழுத்து: இந்த வகையான கழுத்து ஒரு குடம் போல வடிவமைக்கப்பட்டுள்ளது மற்றும் பெண்களுக்கு இந்த வகையான கழுத்து பரவலாக இருக்கிறது. இந்த கழுத்துக் கொண்டவர்கள் கலை மீது ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள், மென்மையானவர்கள், அன்பானவர்களாகவும், கவர்ச்சிகரமானவர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் வளமான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ அதிக வாய்ப்புள்ளது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்