இந்தியர்களின் மூளை அமைப்பு தொடர்பில் வெளியான விசித்திரத் தகவல்..!

மேற்கத்தேய மக்கள் மற்றும் கிழக்கத்தேய மக்களுடன் ஒப்பிடும்போது இந்திய மக்களின் மூளையின் அளவானது பெரும்பாலும் சிறியதாக காணப்படுவதாக ஆய்வு ஒன்றிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இந்த ஆய்வினை International Institute of Information Technology, Hyderabad (IIIT-H) மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.Neurology India இணையத்தில் இவ் ஆய்வானது பிரசுரிக்கப்பட்டுள்ளது.குறித்த ஆய்வு முடிவானது அல்ஸைமர் உட்பட ஏனைய மூளை தொடர்பான வியாதிகள் தொடர்பில் அறிந்துகொள்வதற்கு உதவியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக Montreal Neurological Institute (MNI) திட்டத்தினை தாம் பின்பற்றியதாக குறித்த ஆய்வில் இணைந்திருந்த ஜெயந்தி சிவஸ்வாமி தெரிவித்துள்ளார்.இதேவேளை Montreal Neurological Institute (MNI) டெம்லேட்டில் MRI ஸ்கான் செய்த மூளையின் படங்களை இணைத்து பார்க்கும்போது இந்தியர்களின் மூளையின் அளவு ஒப்பீட்டளவில் சிறியதாக இருக்கின்றமை கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்