600 வருடங்கள் பழமை வாய்ந்த சீன மட்பாண்டம்…!! யாழ் அல்லைப்பிட்டியில் கண்டுபிடிப்பு.!

யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டியில் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு நடவடிக்கையில் சீன மட்பாண்டம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இலங்கை தொல்பொருள் திணைக்களத்தின் அதிகாரிகள் மற்றும் சீன அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வு நடவடிக்கையில் இது மீட்கப்பட்டுள்ளது.இது 600 – 700 வருடங்கள் பழமையான சீன மட்பாண்டம் என யாழ். பல்கலைக்கழகத்தின் வரலாறு மற்றும் தொல்பொருள் பிரிவு பேராசிரியர் புஸ்பரட்ணம்தெரிவித்துள்ளார்.இந்த மட்பாண்டம் சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் ஆதிகாலம் முதல் நேரடி தொடர்பு காணப்பட்டதனை உறுதி செய்யும் வகையில் உள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.குறித்த மட்பாண்டம் மீட்கப்பட்ட இடத்திற்கு அருகில் கடந்த வருடம் மேற்கொள்ளப்பட்ட சீன நாணயமும் இதற்கான சிறந்த உதாரணம் என அவர் கூறியுள்ளார்.புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட மட்பாணம் கடந்த ஓரிரு நாட்களுக்கு முன்னர் கிடைத்ததாகவும், அதனை சோதனையிட்ட பின்னர் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்