45 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இலங்கையில் வாழ்ந்த மனிதர்கள்..!! வெளியான ஆய்வு முடிவுகள்..!

45 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இலங்கையில் மனிதர்கள் வாழ்ந்தமை புதிய ஆய்வின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.ஹோமோ சேபியன் இன மனிதர்கள் ஆபிரிக்காவுக்கு வெளியில் வாழ்ந்தமைக்கான பல ஆதாரங்கள் கிடைத்துள்ளன.இலங்கையின் மலைக்காடுகளில் 45 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்துள்ளனர்.

இந்த மனிதர்கள் குரங்குகளை வேட்டையாடி உணவாக உண்டுள்ளனர். இந்த விடயம் புதிய ஆய்வொன்றில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.அவர்கள் பயன்படுத்திய எலும்புகள் மற்றும் கற்களால் ஆன நூதனமான ஆயுதங்களும் மீட்கப்பட்டுள்ளன.அத்தோடு, வேட்டையாடப்பட்ட குரங்கினங்களின் எச்சங்களும் மீட்கப்பட்டிருப்பதாக குறித்த ஆய்வு சுட்டுகிறது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்