குடும்ப தகராறு காரணமாக யாழில் ஒருவர் கோடாரியால் அடித்துக் கொலை

குடும்ப தகராறு காரணமாக நபர் ஒருவர் கோடாரியால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். சடலம் யாழ்.போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

முணியம்தோட்டம் 2 ஆம் குறுக்குத்தெருவைச் சேர்ந்த கொன்ஸ்ரன் கலஸ்ரன் (வயது 33) என்ற குடும்பஸ்தரே பலியாகியுள்ளார்.

இந்தக் கொலைச் சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது. கொழும்புத்துறை 3 ஆம் குறுக்குத் தெருவைச் சேர்ந்த குடும்பத்தரே கோடாரியால் அடித்துக் கொலை செய்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,

கொழும்புத்துறை பகுதியில் உள்ள நபர் ஒருவருக்கும், உயிரிழந்தவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றிப் போக, அந்த நபர் கோடாரியால் தலையில் அடித்துள்ளார்.

துலையில் விழுந்த அடியால், சம்பவ இடத்திலேயே அந்த குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் சடலம் யாழ்.போதனா வைத்தியசாலை பிரதே அறையில் வைக்கப்பட்டுள்ளது.

கொலைச் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்