மன்னாரில் கொட்டும் அடை மழை..!! நீரில் மூழ்கும் கிராமங்கள்…வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்கள்…!

மன்னார் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கன மழை காரணமாக குளங்கள் கால்வாய்கள் மற்றும் நீரோடைகள் நிறைந்துள்ளன.மேலதிக நீர் அனைத்தும் மக்கள் வசிக்கும் தாழ் நிலப்பகுதிகளுக்குள் வருவதன் காரணமாக அனேகமான கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன. குறிப்பாக மன்னார் பிரதேச சபைக்குட்பட்ட சாந்திபுரம் ஜீவபுரம் ஜிம்றோன் நகர் எமில் நகர் உட்பட பல்வேறு கிராமங்கள் முழுவதும் நீர் சூழ்ந்துள்ளதுடன், பாதைகள் முழுவதும் நீரினால் மூடப்பட்டுள்ளன. தொடர்சியாக மழை பெய்து வருவதனால் வயல் நிலங்கள் மற்றும் தோட்டச் செய்கையில் ஈடுபட்டு வரும் விவசாயிகளின் நிலங்களுக்குள்ளும் நீர் நிறைந்து அனைத்து பயிர்களும் அழுகும் நிலையில் காணப்படுகின்றது. அதே நேரத்தில் தொடர்சியாக மழை பெய்யுமானால், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் சில கிராமங்களை சேர்ந்த மக்கள் இடம் பெயரவேண்டிய நிலை ஏற்படும் என்பது குறிப்பிடதக்கது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்