60 பயணிகளின் உயிருடன் விளையாடிய சாரதி..! பஸ்ஸில் இருந்தே காட்டிக் கொடுத்த பயணி..!!

இலங்கை போக்குவரத்து சபையின் கடுபெத்த பேருந்து சாலைக்கு சொந்தமான பேருந்து ஒன்றின் சாரதியும் நடத்துனரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.குறித்த பேருந்து பயணிகளின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் மிகவும் வேகமாக பயணித்ததன் காரணமாக, இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.மேற்படி பேருந்தில் பயணித்த பயணி ஒருவர் பொலிஸாருக்கு வழங்கிய முறைப்பாட்டையடுத்தே குறித்த சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.இந்த பேருந்து சாரதிக்கு நிறுத்தும் சமிக்ஞையை காட்டிய போதும், அதிக வேகம் காரணமாக சுமார் 300 மீற்றர் வரையில் பயணித்ததன் பின்பே பேருந்து நிறுத்தப்பட்டது.

இதன்போது, குறித்த பேருந்தின் சாரதியும் நடத்துனரும் பேருந்திலிருந்து ஓடிவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.அப்போது சுமார் 60 பயணிகள் பேருந்துக்குள் இருந்துள்ளனர்.இருப்பினும், பேருந்தின் சாரதி 2 மணி நேரத்திற்கு பின் பொலிஸில் சரணடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த நபரை நாளை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்