மலையக தோட்டத் தொழிலாளர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி…!

தோட்ட நிர்வாககங்களும் இலங்கை தேயிலை சபையும் இணைந்து முதல் முறையாக தோட்ட தொழிலாளர்களுக்கு தீபாவளி முற்பணமாக 15 ஆயிரம் ரூபாவை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.தோட்ட தொழிலாளர்களுக்கு வழமையாக பத்தாயிரம் ரூபாவையே தீபாவளி முற்பணமாக தோட்ட நிர்வாகங்கள் வழங்கி வந்தன. இதுவும் பெரும் போராட்டத்தின் மத்தியிலேயே தொழிலாளர்களுக்கு இப்பத்தாயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது. தோட்ட உட்கட்டமைப்பு, மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் அமைச்சரவைக்கு சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரம் ஏற்றுக்கொள்ளப்பட்டு தேயிலை சபையிடமிருந்து ஒவ்வொரு தொழிலாளர்களுக்கும் ஐயாயிரம் ரூபாவை பெற்றுக்கொடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.தீபாவளி முற்பணத்தை துரிதமாக தொழிலாளர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு தோட்ட நிர்வாகங்களுக்கு அறிவித்துள்ளமையும் முக்கிய விடயமாகும்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்