சாகத்துடிக்கும் கணவன்! தீயில் எரிந்து இறந்து போன மனைவி!! வவுனியாவில் மட்டும் ஏன் இப்படி நடக்கின்றது…?

வவுனியா, கற்பகபுரம் பகுதியில் தீயில் எரிந்த நிலையில், வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இளம் குடும்ப பெண் மரணமடைந்துள்ளார்.கடந்த திங்கட்கிழமை வவுனியா கற்பகபுரம் பகுதியில் குடும்பம் ஒன்றுக்குள் ஏற்பட்ட தகராறு காரணமாக மனைவி தீயில் எரிந்த நிலையிலும், கணவன் தலையில் பலமாக தாக்கப்பட்ட நிலையிலும், வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.இதில் மனைவி அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டதுடன், கணவன் விபத்துக்கள் பிரிவில் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.

இந்த நிலையில், கணவன் விபத்து பிரிவில் இருந்து வெளியேறி மூன்றாவது மாடியில் உள்ள மலசல கூடத்திற்கு சென்று அதன் கதவை உடைத்து அதன் ஊடாக நிலத்தில் குதித்து தற்கொலை செய்ய முயன்றுள்ளதுடன், சிறிய கத்தியால் கழுத்தையும் அறுக்க முயன்றுள்ளார்.இதனை அவதானித்த வைத்தியசாலை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், பொதுமக்கள், பொலிசார் இணைந்து மூன்றாம் மாடியில் இருந்த யன்னலை உடைத்து அதனூடாகச் சென்று குதிக்க முயன்ற நபரை காப்பாற்றியுள்ளனர்.

கழுத்தில் காயமடைந்த நிலையில் குறித்த நபர் சிகிச்சைக்காக விபத்துக்கள் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில் தீயில் எரிந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த மனைவி நிதர்சன் தர்சினி (24 வயது) சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.கணவன் சி.நிதர்சன் (27 வயது) தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். அடுத்தடுத்து இடம்பெற்ற இந்த விபரீதச் சம்பவங்களால் அப்பகுதியில் உள்ள மக்கள் அனைவரும் மிகுந்த கவலையடைந்துள்ளதாக, தெரிவிக்கப்படுகின்றது.இச் சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்