பலம் வாய்ந்த பாகிஸ்தானை சொந்த மண்ணில் வெள்ளையடிப்பு செய்த இலங்கை அணி…!!

பாகிஸ்தான் அணிக்கு எதிரான மூன்றாவது இருபதுக்கு – 20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 13 ஓட்டங்களினால் வெற்றிபெற்றுள்ளது.பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணியானது பாகிஸ்தான் அணியுடன் மூன்று ஒருநாள் மற்றும் மூன்று இருபதுக்கு – 20 தொடரில் விளையாடி வருகின்றது.இதில், ஒருநாள் தொடரினை இலங்கை அணி பறிகொடுத்திருந்தாலும், இருபதுக்கு – 20 தொடரில் இளம் வீரர்களின் அசத்தலான ஆட்டம் காரணமாக முதல் இரு போட்டிகளையும் வெற்றிகொண்டது.இந் நிலையில், மூன்றாவது இருபதுக்கு – 20 போட்டி இன்றைய தினம் லாகூர் கடாபி மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு ஆரம்பாமனது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 147 ஓட்டங்களை குவித்தது.இதன் பின்னர் 148 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 134 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 13 ஓட்டத்தால் தோல்வியைத் தழுவியது.பாகிஸ்தான் அணி சார்பில் பாகர் சமான் டக்கவுட்டுடனும், பாபர் அசாம் 27 ஓட்டத்துடனும், ஹரிஸ் சொஹெல் 52 ஓட்டத்துடனும் சப்ராஸ் அஹமட் 17 ஓட்டத்துடனும், இமாட் வஸிம் 3 ஓட்டத்துடனும், அஷீப் அலி ஒரு ஓட்டத்துடனும் ஆட்டமிழக்க இப்திகார் அஹமட் 17 ஓட்டத்துடனும், வஹாப் ரியாஸ் 12 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் வனிந்து ஹசரங்க 3 விக்கெட்டுக்களையும், லஹிரு குமார 2 விக்கெட்டுக்களையும், கசூன் ராஜித ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 தொடரை இலங்கை அணி 3:0 என்ற கணக்கில் கைப்பற்றி பாகிஸ்தானை வெள்ளையடிப்பு செய்துள்ளது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்