கோத்தபாயவிற்கு எதிராக களத்தில் குதித்த சந்திரிக்கா..!! அதிர்ச்சியில் சுதந்திரக் கட்சி ஆதரவாளர்கள்.!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்க முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க மறுப்புத் தெரிவித்துள்ளார்.கோத்தாபயவுக்கு ஆதரவு வழங்குவதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இன்று உறுத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.எனினும், இந்தத் தீர்மானத்திற்கு சந்திரிக்கா மற்றும் அவரது ஆதரவு குழுவினர் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

கட்சியின் தீர்மானம் குறித்து கடும் அதிர்ச்சியடைந்துள்ள சந்திரிக்கா, பிரித்தானியா செல்வுள்ளதாக தெரிய வருகின்றது.இந்நிலைமையில், எதிர்கால நடவடிக்கை தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைப்பாளர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.இதேவேளை எந்த வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவது என்பது தொடர்பில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக, கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விலகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்