அன்ரோயிட் சாதனங்களில் புதிய சரித்திரம் படைத்த பேஸ்புக்..!!

கூகுள் நிறுவனம் பேஸ்புக் நிறுவனத்திற்கு போட்டியாக கூகுள் பிளஸ் எனும் சமூகவலைத்தளத்தினை அறிமுகம் செய்திருந்தது.எனினும், அதனை பிரபலமாக்க முடியாமையினால், கடந்த சில வருடங்களுக்கு முன்னர் நிறுத்தியிருந்தது.ஆனால் பேஸ்புக் நிறுவனம் தொடர்ந்தும் அபார வளர்ச்சியை நோக்கி பயணித்து வருகின்றது.இந்நிலையில் தற்போது மற்றுமொரு புதிய மைல்கல்லை பேஸ்புக் நிறுவனம் எட்டியுள்ளது.

அதாவது அன்ரோயிட் சாதனங்களில் இதுவரை 5 பில்லியன் தடவைகளுக்கு மேல் பேஸ்புக் அப்பிளிக்கேஷன் நிறுவப்பட்டுள்ளது.அத்துடன் கூகுளின் அன்ரோயிட் இயங்குதளத்தில், கூகுள் அப்பிளிக்கேஷன் அல்லாத மற்றொரு அப்பிளிக்கேஷன் இவ்வளவு எண்ணிக்கையில் நிறுவப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.கூகுளின் சில அப்பிளிக்கேஷன்கள் கூட அன்ரோயிட் இயங்குதளத்தில் ஏற்கனவே உள்ளடக்கப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன.ஆனால், பேஸ்புக் அப்பிளிக்கேஷனை பயனர்கள் தாமாகவே தரவிறக்கம் செய்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்