32 கோடி பக்கங்களுடன் உருவாக்கப்பட்டுள்ள உலகின் மிகப் பெரிய இணையத்தளம்..!!

டெல்லியில் இணையதளத்தை உலகிலேயே மிகப்பெரிய அளவில் 32 கோடி பக்கங்களுடன் 23 நாட்களில் உருவாக்கி உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது.டெல்லியை சேர்ந்தவர் அமித் சர்மா. இவர் Cheapflightsall.com என்ற இணையதளத்தை உருவாக்கி இருக்கிறார். இந்த இணையதளத்தை உலகிலேயே மிகப்பெரிய அளவில் 32 கோடி பக்கங்களுடன் 23 நாட்களில் உருவாக்கி உலக சாதனை படைத்து உள்ளார்.32 கோடி பக்கங்கள் உடைய இந்த இணையதளம் 5 டி.பி.க்கு சமமாகும். (1 டி.பி.=1000 ஜி.பி.) இந்த இணையதள முகவரியை விமான போக்குவரத்து வசதிகள் உள்ள 159 நாடுகளில் தொடர்புகொள்ள முடியும்.ஏற்கனவே அமித் சர்மா, 6 முறை உலக சாதனை புரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்