சஜித் பிரேமதாஸாவிற்கு பெருகும் ஆதரவு…!! கதிகலங்கி நிற்கும் கோத்தபாய அணி.!

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிறேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த வேண்டுமென வலியுறுத்தி மலையகப் பிரதேசமான ஹட்டனில் சத்தியாக்கிரக போராட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.அமைச்சர் சஜித் பிறேமதாச ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்க வேண்டும் என்பதே ஸ்ரீலங்காவில் வாழும் அடிமட்ட மக்கள் அனைவரினதும் எதிர்பார்ப்பு என இந்த சத்தியாக்கரகத்தை ஆரம்பித்துள்ள தேசிய மக்கள் சபையின் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.ஸ்ரீலங்காவில் எதிர்வரும் நவம்பர் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஜக்கிய தேசிய கட்சி சார்பில் அமைச்சர் சஜித்பிரேமேதாசவை வேட்பாளராக நிறுத்த வேண்டுமென வலியுறுத்தி ஹட்டன் – பொகவந்தலாவையில் இருவர் சத்தியாக்கிரகப் போராட்டததை ஆரம்பித்துள்ளனர்.

பொகவந்தலாவ லெச்சுமிதோட்டம் கீழ் பிரிவில் உள்ள முத்துமாரியம்மன் ஆலயத்திற்கு முன்பாக தேசிய மக்கள் சபை உறுப்பினர்களான தியாகராஜ் கலைச்செல்வன் மற்றும் ஜெனாஸ்டன் ஆகியோர் நேற்று வெள்ளிக்கிழமை (20) காலையில் இருந்து இந்த சத்தியாகிரக போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.இதன்போது கருத்து தெரிவித்த தேசிய மக்கள் சபையின் ஹட்டன் பிராந்திய இணைப்பாளர் ஜெனாஸ்டன் ஐக்கிய தேசியக் கட்சி மக்களின் எதிர்ப்பார்ப்புகளை மதித்து தீர்மானம் எடுக்க வேண்டுமென வவலியுறுத்தினார்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்