நீராவியடிப் பிள்ளையார் ஆலய விவகாரத்தில் தமிழர்களுடன் தர்க்கத்தில் ஈடுபட்ட பௌத்த பிக்கு மரணம்..!!

முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் கோவிலை அபகரிக்கும் நோக்கில் சர்ச்சைகளை ஏற்படுத்திய பௌத்த துறவி உயிரிழந்துள்ளார்.நீண்டகாலமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மஹரகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த தேரர் இன்று உயிரிழந்துள்ளார்.தமிழ் மக்களுக்கு சொந்தமான நீராவியடி பிள்ளையார் ஆலயத்தை தொல்பொருள் திணைக்களத்தின் ஆதரவுடன் தேரர் அபகரித்திருந்தார். குருகந்த ரஜமஹா விகாரை என்னும் பெயரில் விகாரை அமைத்து அங்கு தங்கியிருந்தார்.அங்கு ஆலய வழிபாட்டுக்கு செல்லும் தமிழ் பக்தர்களுக்கு பல்வேறு வகையில் தொந்தரவுகளை கொடுத்திருந்தார்.ஆலயத்தை பறித்தமை தொடர்பான வழக்கு விசாரணைகள் வவுனியா மேல் நீதிமன்றில் நடைபெற்று வருகின்றன.இந்நிலையில், சர்ச்சைக்குரிய பௌத்த துறவி இன்று உடல்நலக் குறைவால் உயிரிழந்துள்ளார்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்