பேரூந்துடன் மோதி உந்துருளி கோர விபத்து…பரிதாபமாக பலியான இளைஞன்…!!

அனுராதபுரத்தில் பேருந்து ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.தலாவ பகுதியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற விபத்தில் 28 வயதான இளைஞன் ஒருவரே உயிரிழந்துள்ளார்.அனுராதபுரத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்தில், எப்பாவெல பிரதேசத்தில் தலாவ நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேருக்கு மோதியுள்ளது.இதன் போது, குறித்த மோட்டார் சைக்கிளை 300 மீற்றருக்கும் அதிக தூரம் இழுத்து சென்றே பேருந்து நின்றுள்ளது. பேருந்தின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாதமையினால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்து இடம்பெற்ற இடத்திலேயே குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.விபத்தையடுத்து, சாரதி மற்றும் நடத்துனர் அங்கிருந்து தப்பிச் சென்று பின்னர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.சம்பவம் தொடர்பில் எப்பாவெல பொலிஸாார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்